Saturday 6 October 2012

சர்பத்: தண்ணீருக்கு பதில் ..சோடா கலந்து சோடா சர்பத் விரும்பி குடிப்பர் ...


நாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ...குளிர்பானம் ...சிறுவயதில் ...எப்படியேனும் ஒரு சர்பத் குடிக்க பணம் சேர்த்துவிடுவது என்ற லட்சியம் அடிக்கடி தோன்றும் .கொஞ்சம் களைப்பு மேலிட்டால் ...சர்பத் அருந்தும் பழக்கம் நம்மிடையே அதிகம் ..ஆங்காங்கே அமைந்திருக்கும் ...பெட்டிகடைகளில்  வியாபார பொருளாய் ...சர்பத் தவறாமல் இடம்பெற இதுவே காரணம் . தெரிந்த யாரையாவது ..கடைதெருவில் சந்தித்தால் ..சர்பத் குடிக்கிறீர்களா ? என்ற விருந்தோம்பல் இன்றும் உண்டு ... 

சுமார் அரை லிட்டர் பிடிக்கும் டம்பளர் ...இருக்கும் .ஒரு எலுமிச்சை பழத்தை ..இரண்டாய் நறுக்கி ..மரத்தாலான சாறு  பிழியும் கருவியில் வைத்து அழுத்தி ..சாறு எடுத்து  ..கொஞ்சம் சர்பத் ஊற்றி ...தண்ணீர் கலந்து ...கடைகாரர் தரும் கலையே ..ஒரு அழகு .. 

சிலர் ..எலுமிச்சை கலக்காமல் ..வாழைபழத்தை ..டம்ப்ளரில் ..நசுக்கி ..சர்பத் ஊற்றி பழ  சர்பத்து  குடிப்பார் ...இன்னும் சிலர் ..தண்ணீருக்கு பதில் ..சோடா கலந்து சோடா சர்பத்  விரும்பி குடிப்பர்  ...நுங்கு சர்பத்தும் உண்டு ..

இவ்வளவு வகையான சுவையான சர்பத்துகள் ..நம் மாவட்டம் தவிர பிற இடங்களில் உண்டா என தெரியவில்லை ..

கோக் ,பெப்சி காலத்திலும் நம் மண்ணில்  சர்பத்தின் குறையாத  வியாபாரம் ...ஆச்சர்யம் தருகிறது .... மகிழ்ச்சியும் கூட .

No comments:

Post a Comment