Saturday 6 October 2012

ஜாமெட்ரி பாக்ஸ் (geometry box): பாகைமானி ,முக்கோண மானி,காம்பஸ் என்று அவர்கள் சொல்வதை கேட்க நேரிடும் போதெல்லாம்...

ஆரம்பபள்ளியில் படித்த காலத்தில் ..எப்படா உயர்நிலை பள்ளிக்கு செல்வோம் என ஏங்க  ....முக்கிய முக்கிய காரணம் ஜாமெட்ரி பாக்ஸ். மூத்த மாணவர்கள் கையில் இதை பார்க்கும் போதே  ஆசையாக வரும் ..பாகைமானி ,முக்கோண மானி,காம்பஸ்  என்று அவர்கள் சொல்வதை கேட்க நேரிடும் போதெல்லாம் ...எதோ வெப்பமானி போன்ற அளவிடும் ...கருவி,பெரிதாக இருக்கும்  என்றே நினைத்திருக்கிறேன் ...

ஒரு வழியாய் எட்டாம் வகுப்பில் இந்த அற்புத பொருள் என்  கையில் கிடைத்தது ...பின்னாட்களில்  முதன்முதலில் ..,அலைபேசி கணிணி வாங்கும் போது  வராத மகிழ்ச்சி அப்போது வந்தது ..ஆரம்பத்தில் சில நாட்கள் பத்திரமாய் கவர் பிரிக்காமால் ...பாதுகாத்தேன் ..உள்ளே ஒரு காகிதம் மடித்து வைத்து ..ஒரு கடவுள் படம் ..சில்லறை காசு ..நடராஜா பென்சில் ,ரப்பர் ,பென்சில் சீவி ..எப்போதும் ஒழுகும் பேனா ..கரிகாம்பு ..நிப்பு போன்ற spareparts ..என எனது பொக்கிசங்கள் அனைத்தும் அடைத்து வைக்கப்படும் .மூடி பகுதியின் உட்புறமும் காகிதம் மடித்துவைத்து ..பாதுகாத்த பழக்கம் ..மறக்க முடியவில்லை ..சில மாதங்களில் லேசாக துருபிடிததும் ..காம்பஸ் கொண்டு ..மேல் பகுதியில் பேர் எழுதி ...பெருமை பட்டேன் ..

ஜாமெட்ரி பாக்ஸ் இல் இருக்கும் இரு முனை கொண்ட ஒரு வாஸ்து ..கடைசிவரை ..பள்ளியில் நான் பயன்படுத்தும் அவசியமே இல்லாமல் போனது ..

  எனக்கே எனக்கான உடமை என்ற  அக்கறை ...பின்னாட்களில் மற்ற எந்த பொருள் மீதும் இந்த அளவு இருந்ததில்லை  என்பது நினைக்கும்  போது  ஆச்சர்யமே ......

No comments:

Post a Comment