Friday, 5 October 2012

வெற்றிலை பாக்கு தட்டு, வெற்றிலை பாக்குப் பெட்டி














தமிழர் கலாசாரத்தில் வெற்றிலை முக்கிய இடம் பெறுகின்றது. 

அந்தகாலத்தில் உறவினர்,நண்பர்கள் இல்லங்களுக்கு சென்றால் 
உபச்சாரங்களுக்கு பிறகு இறுதியில் வரும் தட்டு.பாக்கு,வெற்றிலை,
சுண்ணாம்பு,இதர வாசனைபொருட்கள் நிரப்பி வைத்திருக்கும் 
தாம்பூலத்தட்டு.கூடச்செல்லும் சிறார்களுக்கு அதிலேயே கண்ணாக 
இருக்கும்.சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எடுத்து வாயில் அதக்கிகொள்ளும்
 சிறியவர்களில் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது?தட்டு வடிவில்
 மட்டுமில்லாமல் அன்னம்,மயில் சேவல் பூ வடிவங்களில் கூட இருக்கும்.
 இதை வெற்றிலையல்ல வெற்றி இலை என்று கூறுவதுதான் சிறப்பு என்று
 வாரியார் சுவாமிகள் கூறுவர். வெற்றிலை பயன்பாட்டில் காலவரையறை 
கிடையாது. சித்தர்களோ, துறவியான முனிவர்களோ இதை உலகிற்கு காட்டி
 இருப்பர் என்று கருத இடமுண்டு. குடா நாட்டிலும் வலி வடக்கு உட்பட 
அநேக பிரதேசங்களில் வெற்றிலை பயிரிடப்படுகின்றது.

ஆலய அர்ச்சனைத் தட்டில் மூன்று வெற்றிலைகளுடன் இவை யாவும் 
பெருமானுக்கு சமர்ப்பணமாகும். வசதி படைத்தவர்கள் 108, 1008 மாற்று 
வெற்றிலைகள் பெரிய தட்டில் நுனிப்பக்கம் வெளியே தெரிய, அபிஷேக 
நிகழ்வுகளில் சமர்ப்பிப்பர். வெற்றிலையில் இரு வகையுண்டு. ஒன்று சாய்பு 
மற்றது மாற்று இது காரமுடையது. மருத்துவக் குணமுடையது. 
வெற்றிலையில் இலக்குமி வாசம் செய்கிறாள் எனும் நம்பிக்கை. ஆனால் 
சிவாச்சாரியார் ஆசீர்வாதம் செய்யும் போது சங்கற்பம் செய்த தர்ப்பையைப் 
பெற்று எம்மை ஆசீர்வதிப்பார். புதுமனை ஆரம்பம், கைவிசேடம், குடிபூரல், 
ஏடு தொடக்கல், பொன் பூட்டுதல், திருமண ஒப்புதல், தைப்பூசம், பூப்னித 
நீராட்டு வைபவங்களில் வெற்றிலைப் பயன் பாடு அதிகம்,விருந்தினர் 
வருகையின் போதும் தாம்பூலமே.

தாம்பூலம் மகிழ்வின் உறைவிடம். அதே நேரம் தீயவையிலிருந்து பாதுகாக்கும்
 காவலன். மற்ற இலைகளுடன் ஒப்பிடுகையில், இதன் 
அமைப்பு வித்தியாசமானதே. எம் நாட்டிலும் குடாநாட்டு வெற்றிலைக்கும்
 கொழும்பு வெற்றிலைக்கும் இடையில் வித்தியாசம் உண்டு. இங்கு இன -
 மத பேதமின்றி தாம்பூலப் பயன்பாடு அதிகம்.


பூப்புனித நீராட்டத் தயார் நிலையில் ஸ்நானம் செய்யப் புகும் கன்னிப் 
பெண்ணின் இரு கரங்களிலும் சில்லறை நாணயங்களுடன் வெற்றிலைச் 
சுருளைக் கொடுத்து அழைத்துச் செல்வர். இதேபோன்று திருமாங்கல்ய 
தாரண நிகழ்விலும் மணப் பெண் ஸ்நானம் செய்யப் புறப்படுகையில் 
கொடுப்பர். தூய்மை கருதி இதைச் செய்வர். ஸ்நானம் முடிந்து அலங்கரித்த
 மங்கையை பல்வித ஆரத்திப் பொருட்களுடன் நிறை நாழியில் 
உலோகத்துண்டுடன் வெற்றிலையின் நுனிப் பகுதி மேல் நோக்கி இருக்க 
முன்னால் கொண்டு செல்வர். மூத்தோர், அறிஞர், ஆசிரியர், தாய், 
தந்தையிடத்து வெற்றிலை கொடுத்து ஆசி பெறும் வழமை இன்னும் 
மாறவேயில்லை.

தமிழர் வாழ்வில் வெற்றிலையின் பயன்பாடு இன்றி எதுவுமேயில்லை 
என்ற கலாசாரப் பின்னணி பாதுகாக்கப்படல் வேண்டும். வெற்றிலை 
பாக்கு, சுண்ணாம்பு, புகையிலையுடன் ஏலம், கராம்பு, கறுவா என்று, 
வாய் நாற்றம் போக்க என்று கூறி, மென்று விழுங்குவது தவறு என்பது 
ஆயுர்வேத நூல்களின் கூற்று. இதனால் புற்று நோய், சுவாசக் கோளாறுகள்
 ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகின்றது. வெற்றிலையின் நடு 
நரம்பையும் காம்பையும் விலக்கிச் சுவைப்பது பாதகமற்றதாம். வெற்றிலை 
பாக்குத் தவிர மற்றவை தவிர்க்கப்படல் வேண்டும் என்பர். தமிழ் நாட்டில் 
வசதி படைத்தவர் லாகிரி வஸ்துகளுடன் தங்கம் வெள்ளி பஸ்பம் சேர்த்தும்
 உண்பர்.

வெற்றிலையின் மருத்துவப் பயன்பாடு மிக உன்னதமானதே. வெற்றிலை 
சீரண சக்தி, உற்சாக சிந்தனை, சீரான மூளைத் தொழிற்பாடு, மிளகு தேனுடன்
 சேர்த்து நாட்பட்ட இருமலுக்கு மாற்று வெற்றிலை சுவாச நிவர்த்தி, 
அறுகம்புல்லுடன் சேர்த்து வெற்றிலைக் கஷாயம் தினம் இருதடவைகள் 
அருந்திவரின் நோய் தவிர்ப்பு, எதிர்ப்புக்கு உதவியாகும்.

தமிழனின் தனித்துவக் கலாசாரப் பண்பாட்டுக் கோலங்களைக் காலம் தவறாது
 போற்றி ஏற்றுவோமாக. பொருளாதார முன்னேற்றம் கிடைத்தது. பனை
 ஓலைகளால் செய்த பெட்டி, பை, காசு, கொட்டப் பெட்டி, வெற்றிலை பாக்குப்
 பெட்டி, பின் இவை உலோகத்தில் செய்யப்பட்டன. முக்கியமாக செம்பில்
 தட்டம், பின்னர் இவை பித்தளை, வெள்ளி என்று விரிந்தது. தட்டம் பலவகை 
குத்துக்கால் தட்டம் சகலதிலும் முதன்மையானதே வெற்றிலை செல்வமே. 

No comments:

Post a Comment