Saturday 6 October 2012

உண்டியல் காசு: ஐம்பது பைசா / ஒரு ரூபாய் என்று ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது...



சிறு வயதிலிருந்தே பாக்கெட் மணி போல காசு கிடைத்தால் செலவு செய்து பழக்கம் இல்லை.ஊரிலிருந்து வந்து செல்லும் உறவினர்கள் ஊர் திரும்பும்பொழுது குழந்தைகளுக்கு ஐம்பது பைசா / ஒரு ரூபாய் என்று ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. அதனால் ஒரு சிறு கணிசமான  தரும் காசுகளை உண்டியலில்  சேமிப்பும் இருந்தது.

நண்பர்கள் இந்த மாதிரி காசை மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் உடனே செலவு செய்து விடுவார்கள். சிலர் என்னைப் போல சேமித்து வைத்திருப்பார்கள். அஞ்சு பைசா அம்மு போல உண்டியல் வைத்திருப்போம். செலவு செய்யாமல் சேர்த்து சும்மா வைத்திருப்பதற்கு பெற்றோரிடமே கொடுத்து விடலாமே என்று நண்பர்கள் கிண்டலடிப்பார்கள்.

பின்னர், பள்ளியில் சஞ்சாயிகா திட்டத்தில் சேர்த்து வைக்கப் பட்டு, சேர்த்ததுண்டு. ஆனால் அது பள்ளியின் கட்டாய திட்டம் என்பதால் அதிகம் சேர்க்க முடிந்ததில்லை! கட்டாயப் படுத்தும் போது சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது!

அஞ்சலக சேமிப்பில் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் தொடங்கியது. நம் கையெழுத்தையே சந்தேகப் படத் தொடங்கி ஒருமுறை பணம் திரும்பி வாங்குவதில் தாமதமானது. அதில் சேர்த்த பணத்தில் முதல் முறை பெற்றோர், மற்றும் உடன் பிறந்தோருக்கு ஒரு தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. சேமிப்பேன். சந்தோஷமாகச் செலவு செய்ய! 




வேலைக்குப் போகத் தொடங்கிய பிறகு கணக்கு எழுதும் பழக்கம் அப்பாவினால் சொல்லிக் கொடுக்கப் பட்டது. வாங்கும் சம்பளத்துக்கு வரவு செலவு எழுதும் பழக்கம் வந்தது. நல்ல பழக்கம்தான். இதில் சில பல உதவிகள் உண்டு. ஒருசமயம், கேபிள்காரர் ஆறு மாதமாய் பணம் தரவில்லை என்றபோது கணக்கு நோட்டுப் புத்தகத்தை இன்ஸ்டன்ட்டாகக் காட்டி நிரூபித்திருக்கிறேன். கணக்கு எழுதும்போது , சில குறிப்புகளுடன் எழுதுவது வழக்கம். செல்லாத ஐம்பது ரூபாய் நோட்டு கொடுத்து பின்னர் நானே வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னது' என்று அடைப்புக் குறிக்குள் இருக்கும்..! இது போல வாசகங்களை நினைவு படுத்தி சொன்னதும் அவரும் ஒப்புக் கொண்டார்.

No comments:

Post a Comment