Sunday 7 October 2012

நமது கிராமம் அரசூர், விழுப்புரம் மாவட்டம். My Village Arasur, Villupuram - 607107


அரசூர்  
       தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகில் சுமார் 14 கிலோ மீட்டர்  தூரத்தில் தெற்கே அரசூர் ஊராட்சி அமைந்துள்ளது.  பல ஆண்டுகளுக்கு முன் அரசர்களும், குறுநில மன்னர்களும் அரசூரை மையமாக வைத்து ஆட்சி செய்ததால் அரசனூர் என்று அழைக்கப்பட்டது அரசனூர் பேச்சி வழக்கில் மறுகிஅரசூர் என்ரானது. இந்த ஊரின் வடக்கே விழுப்புரம், கிழக்கே கடலூர், மேற்கே திருகோவிலூர், தெற்கே உளுந்தூர்பேட்டையும் உள்ளது. சென்னை to  கன்னியாகுமரி பைபாஸும்,  கடலூர் to பெங்களூர் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளத்தால் பல கிராமங்களின் மையமாக உள்ளது. விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியிலும், முன்னர் திருநாவலூர் தொகுதியாக இருந்தது தற்போது உளுந்தூர்பேட்டை தொகுதியாக உள்ளது. திருவென்னைநல்லூர் ஒன்றியத்தின் கீழ் செயல்படுகிறது. அரசூர் ஊராட்சியில் சுமார் 7,500 மக்கள் வசிக்கின்றனர் இதில் 5,500 வாக்காளர்களும்  95 % மக்கள் படிப்பறிவு பெற்று உள்ளனர். அரசூரை சுற்றி இருவேல்பட்டு, ஆலங்க்குப்பம், தென்மங்கலம், கிராமம், காரபட்டு, குமாரமங்கலம், பொய்கையரசூர், மாமந்தூர், கந்தலவாடி,  சித்தனங்கூர், பேரங்கியூர், அரும்பட்டு, மடப்பட்டு போன்ற கிராமங்கள் உள்ளன.
        ஊரின் நீராதாரமாக தென்பெண்ணை ஆற்றின் கிளையாரான மலட்டாறும், பெரிய ஏரியும் உள்ளது. வராகியம்மன், திரௌபதியம்மன், துர்க்கையம்மன், அங்காளபரமேஸ்வரி, பவானியம்மன், அய்யனார், தந்துநூரன், ஆஞ்சநேயர்  உள்பட  18 கோவில்களும், 18 குளங்களும்,  மலட்டாறும் உள்ளது ஊரின் சிறப்பாகும். மாணவர்கள் தடையின்றி படிக்க தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி மற்றும் புகழ் பெற்ற V .R .S பொறியியல் கல்லூரியும் ஊரிலேயே அமைந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் JCB, பாலாஜி டைல்ஸ், உரக்கம்பெனி, 22KV துணை மின்நிலையம், பேங்க் ஆப் பரோடா, ERS, கிருஷ்ணவேணி திருமண மண்டபம் உள்பட  பல வர்த்தக நிறுவனங்கள் கொண்ட கிராமமாக உள்ளது. MGR, கலைஞர், வைகோ, பாக்கியராஜ், ராமராஜ் ஆகியோர் தங்கிய அரசு பயணியர் பங்களா உள்ளது. 2011ல் வெளியான எங்கேயும் எப்போதும் அரசூரை மையமாக வைத்து அரசூரில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
      அரசூரின் அருகில் புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவில் (12 KM), பரிகல் நரசிங்க பெருமாள் கோவில் (10 KM), கிராமம் திருமுண்டீஸ்வரர் (4 KM), திருவென்னைநல்லூர் தடுத்து ஆட்கொண்ட நாதர், கிருபாபுரீஸ்வரர் (7 KM), பிடாகம் தென்பெண்ணை ஆறும் உள்ளது. 
        திரு. லஷ்மி நாராயணன் படையாச்சி, திரு. A.V. பாலசுப்ரமணியன் ஆகியோர் ஒன்றிய பெருந்தலைவரகவும், திரு A.J. பன்னீர்செல்வம் (1991 - 1995), திரு. A.V. பாலசுப்ரமணியன் (1989 - 1991) ஆகியோர் சட்ட மன்ற உறுப்பினராகவும் மக்களால் தேர்தேடுக்கப்பட்டனர். 9 வார்டுகளை கொண்ட அரசூர் ஊராட்சில் திரு. ஆனந்தன், திருமதி. சக்தி ஆனந்தன், திருமதி. முத்தழகி ராஜாராமன், திரு A.J. பன்னீர்செல்வம் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவராகவும், 2011ல் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில்திரு. மேகநாதன் அவர்கள் வெற்றி பெற்று தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். 
         சென்னை to  கன்னியாகுமரி பைபாஸ் ஊரின் நடுவே செல்வதால் அடிகடி விபத்துக்கள் நடப்பது அரசூர் மக்களிடையே பெரும் இடையூறாகவும், அச்சமாகவும்  உள்ளது.
                                                                                                                            - முரளிகிருஷ்ணா 
       

No comments:

Post a Comment