Saturday 6 October 2012

மாட்டு வண்டி: எங்கள் தெரு வழியாக காலையில் ஏழு மணியளவில் ஜல் ஜல் என்ற ஓசையோடு ஒரு மாட்டு வண்டி போகும்.


குலதெய்வம் சாமி கும்பிடப்போகுதல் எனச் சற்றுத் தள்ளிப் பயணம் போகும்போது கூடு பொருத்தப்பட்ட வண்டியில் பயணம் நடக்கும்.பெண்களும் குழந்தைகளும் மட்டும் வண்டியிலிருப்பார்கள்ஆண்கள் நடக்க வேண்டியதுதான்கிராமத்துத் திரையரங்கு வாயிலுக்கு முன்னால் உள்ள திடலில்புதுப்படம் போட்ட போதுபத்திருபது மாட்டுவண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும்.
வில்லுவண்டி என அழைக்கப்படும் சிறிய கூட்டு வண்டி நன்கு வசதியான நிலக்கிழார்களின் வீட்டில் இருக்கும்வண்டியின் உட்புற விதானத்தில் வெல்வெட் துணி பூ வேலைப்பாடுடன் இருக்கும்வண்டி தொலைவில் வரும்போது மணிச்சத்தம் "ஜல்ஜல்என்று கேட்கும்வில்லு வண்டிகள் கிராமப்புறங்களில் அதிகாரத்தின் சின்னமாக விளங்கினவண்டியின் பின்னே'தொங்கோட்டம்ஓடும் சிறுவர்களுக்குத் திட்டுதான் மிஞ்சும்கிராமத்து மைனர்கள் வாழ்வில் தட்டு வண்டி முக்கிய இடம் வகித்ததுஇருவர் மட்டும் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய தட்டுவண்டிகளில் அம்சமான மாடுகளைப் பூட்டிக்கொண்டு வெள்ளைவேட்டி சட்டையுமாக மைனர் ஊர் மந்தைக்கு வர்ரப்ப ஊரே வேடிக்கை பார்க்கும்.
வெளியூர்த் திருவிழா அல்லது சந்தைக்குப் போய்விட்டுத் திரும்பும் முப்பதுக்கும் மேற்பட்ட வண்டிகள் சாலையோரத்தில் அணிவகுத்துப் போகும் காட்சி அருமையாக இருக்கும்.அதிலும் இரவு வேளையில்,வண்டிக்கு அடியில் தொங்கும் ஹரிக்கேன் விளக்கின் ஒளியும், சக்கரத்தின் ஆரக்கால் நிழலும், மாட்டுக் கழுத்து மணிகளின் ஒலியும் ஒருகணம் பிரக்ஞையை உறையச் செய்திடும் தன்மையுடையன.

எண்பதுகளின் தொடக்கத்தில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணி கிடைத்து நான் போனபோதுபேருந்து நிலையத்தில் வரிசையாக மாட்டு வண்டிகள் நின்று கொண்டிருந்தன.மதுரையைப் பொறுத்தவரையில் "ஜட்காஎனச் செல்லமாக அழைக்கப்படும் மட்டக் குதிரைகள் பூட்டப்பெற்ற குதிரை வண்டிகள்தான் பிரபல்யம்அவை குதிரை அல்லகோவேறு கழுதைகள் என்று அறிந்தபோது கொஞ்சம் வருத்தமாக இருந்ததுமுக்கியமான இடங்களில் குதிரை வண்டி ஸ்டாண்டுகள் இருந்தனகுதிரை லத்திபுல்லின் நாற்றம் நிரந்தரமாக வீசிக்கொண்டே இருக்கும்குதிரைகள் தண்ணீர் குடிப்பதற்காகச் சில சந்திப்புகளில் நீளவாக்கில் கல்லினால் கட்டப்பெற்ற தொட்டிகள் இருந்தன.சில நகரப் பேருந்துகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாலும் நடுத்தர வர்க்கத்தினரின் செல்லமான வாகனமாகக் குதிரை வண்டி இருந்ததுரமலான் நாளில் நன்கு பிரியாணியைச் சாப்பிட்டுவிட்டு இஸ்லாமிய இளைஞர்கள் குதிரை வண்டிகளில் செண்ட் மணக்கபெரும் வரிசையில் மதுரையைச் சுற்றி வருவார்கள்அன்று குதிரைவண்டிக்காரர்களின் கைகளில் தாராளமாகப் பணம் புழங்கும்.
தட்டுவண்டிபோல அலங்கரிக்கப்பட்ட வண்டியில் (இருவர்மட்டும் அமரக்கூடியதுபெரிய அழகிய குதிரையைப் பூட்டிக்கொண்டு கையில் சவுக்குடன் கிளம்புகிற கிராமத்துச் சோக்காளியின் பவுசு காற்றில் வழியெங்கும் பரவும்அந்த மாதிரி குதிரை வண்டியில் சிட்டாக விரட்டிச் செல்லும்போதுசக்கரம் கல்மீது ஏறி வண்டி குடைசாய்ந்துஓட்டுபவருக்குக் காயம் ஏற்பட்டால்கிராமத்தினர் உள்ளுக்குள் மகிழ்ந்துபோவார்கள்.
எங்கள் தெரு வழியாக காலையில் ஏழு மணியளவில் ஜல் ஜல் என்ற ஓசையோடு ஒரு மாட்டு வண்டி போகும். 



இவ்வண்டிலுக்கு இரண்டு எருதுகள் பூட்டி இழுக்கப்படுகின்றது. இதற்கு நுகம் என்ற பகுதி உதவுகின்றது. இதைவிட ஒரு மாடு பூட்டி இழுக்கக்கூடிய ஒற்றைத் திருக்கை வண்டில், பிரேத வண்டில் போன்ற பல்வேறு தேவைகளுக்கேற்ப வண்டில்களும் பாவனையில் இருந்தன. தற்போது போலல்லாமல் சூழலுக்கு பாதிப்பில்லாமல் பாவிக்கக்கூடிய ஒரு வாகனமாக இருந்துள்ளது மட்டுமல்லாமல் மூதாதையர்களின் அரிய பொக்கிசமாக இன்றும் உள்ளது. 

No comments:

Post a Comment