Saturday 6 October 2012

பலூன்: பலூன் காற்று வெளியேறும்வரை சப்தம் கேட்கும் ..

என் சிறுபிள்ளை பருவத்தில் ..கிடைத்த உயர்ந்த விளையாட்டு பொருள் ..இதுவே இப்போதுபோல் ..ரிமோட் கார் ,வித விதமான பொம்மைகள் எல்லாம்  அப்போது நான் காணகூட கிடைத்ததில்லை ..எங்கள்  ஊர் திருவிழாவில் ...ஒரு கம்பில் கொத்து  கொத்தாய்  தொங்கும் பலூன்களோடு ...மூங்கிலால் செய்யப்பட்ட ஊத்து வைத்துக்கொண்டு நிற்கும் வியாபாரி தாத்தாவை  பார்த்தாலே ஏக்கம் வரும் .ஒரு பலூனை ஊத்தின்  ஒரு முனையில் இணைத்து ஊதினால் ...பலூன் பெரிதாகும் ...பின்னர் நாம் வாயிலிருந்து ஊத்தை  வெளியில் எடுத்தால் ...பலூன் காற்று வெளியேறும்வரை சப்தம் கேட்கும் ..சில சிறுவர்கள் முதல்நாளே வாங்கி என் முன்னால்  ஊதி பொறாமையை  உருவாக்குவர் .ஆசை ஆசையாய் வரும் .வாங்கி கேட்டால்  ...அதட்டியும் ...அடித்தும் ...இயலாமையை  மறைப்பார் ..என் அம்மா ...

இறுதி நாள் திருவிழா அன்று ... எப்படியாவது ஓன்று கிடைத்துவிடும் ..கூடவே ஒரு குச்சி ஐஸும் ....என் திருவிழா கொண்டாட்டம்  இனிதே நிறைவடையும் ..இப்போது என் குடும்பத்து குழந்தைகள் ...திருவிழா பொம்மைகள் வாங்கி  கேட்டால் முடிந்தவரை நான் மறுப்பதில்லை ...காரணம் ..கனத்த நினைவுகள் .என் .நெஞ்சில் இருப்பதால் ...............

No comments:

Post a Comment