Saturday 6 October 2012

பொன்வண்டு : பள்ளிக்கு செல்லும்போது ..தீபெட்டியில் அடைத்து வைத்து...


பொன்வண்டு

அன்றைய சின்ன குழந்தைகளின் செல்லபிள்ளை ...பொதுவாக எந்த வண்டுகளுமே ..நமக்கு பிடிப்பதில்லை ...விதிவிலக்காக ..பொன்வண்டு மற்றும் சில்வண்டு ..இரண்டும் ..நம் மனதோடு ..கலந்தவை ..

கொன்றை ..வாவை ..மரங்கள் செழித்து வளரும் பருவத்தில் ..அதிகமாக தென்படும் ..பொன்வண்டு ..பல வண்ணங்களில் பலவிதங்களில் காணப்படும் ..
மினுமினுக்கும் ..வண்ணங்களில் ... ஜொலிக்கும் ..தொட்டு பார்த்தால்..வழுக்கிகொண்டு செல்லும் அளவு ...நேர்த்தியான வடிவமைப்பு
வெளிநாடுகளில் ஆபரணங்கள் செய்ய பொன்வண்டு  பயன்படுத்தப்படுவதாக இணையத்தில் படித்தேன் ..

குழந்தை பருவத்தில் ..இவற்றை பிடித்து ..நூல் கட்டி விளையாடியதுண்டு அப்போது ..விர்ரென பறந்து ..ரீங்காரமிடும் ...பள்ளிக்கு செல்லும்போது ..தீபெட்டியில் அடைத்து வைத்து ..கொன்றை ,வாவை இலைகளை துண்டாக்கி ..உணவாக வைத்து செல்வோம் அல்லது பள்ளிக்கு கொண்டு செல்வோம்  .மாலையில் .சிலவேளை ..சின்னதாக முட்டையும் ...இடப்பட்டிருக்கும் ...

மலரும் நினைவுகளுடன் .தென்படுமா என .காத்திருக்கிறேன் ..மீண்டும் பொன்வண்டு பிடிக்க
 

No comments:

Post a Comment