Saturday 6 October 2012

இலந்தைபழம்: பழம் பழுக்கும் முன்னரே ..காய்களை கல்லால் அடித்து ...உண்போம் ...


இலந்தைபழம் ...நான் பள்ளி சென்ற காலம் முதல் இன்றுவரை ..பள்ளி கூடங்களின் முன் ...விற்கப்படும் முக்கிய பண்டம் ...சின்ன பழத்தில்  பெரியவிதை ...கொஞ்சம் சதை இனிப்பு  சுவை என்று சொல்ல முடியவில்லை ...ஆனால் ...அனைவருக்கும் பிடிக்கும் ..கடைகளில் வாங்குவதை விட ...மரத்தடியில் பொறுக்கி  சாப்பிடுவதே ...அலாதியான அனுபவம் ..ஊரில் நிறைய மரங்கள் நின்றன ....பழம்  பழுக்கும்  முன்னரே ..காய்களை கல்லால் அடித்து ...உண்போம் ...இடைக்காலத்தில் ..நரி ஊறுகாய் என்று கருப்பு நிறத்தில் ..கடைகளில் விற்பனைக்கு வந்ததது ...ஒரிஜினல் பழத்தைவிட  நல்ல சுவையாக இருக்கிறது ...

இலந்தை மர ...கொம்பை ஒடித்து ..வௌவால் பறக்கும திசையில் ...காத்திருந்து அடித்து பிடித்ததுண்டு ....அதன் முட்களில் வௌவால் இறகுகள் சிக்கிக்கொள்ளும் ...பிறகென்ன .வௌவால்  பிரை  தயாராகிவிடும் ...சமீபத்தில் ..அளவில் பெரிய இலந்தை பழங்கள்  விற்பனைக்கு வருகின்றன ...சுவைதான் இல்லை ...நாஞ்சில் நாட்டில் ...இலந்த  விளை  என்று சில ஊர்களுக்கு பேர் இருப்பது ..இம்மரத்துடன் நம் உறவை சொல்கிறது எலந்தம் பழம்....


No comments:

Post a Comment