Saturday 6 October 2012

சோன்பப்டி : தூரத்தில் மனியோசையே இவரது வருகையை ...குழந்தைகளுக்கு அறிவிக்கும் ..


சோன்பப்டி ...sonpapdi 


நம் தெருக்களில் ...மணியடித்தபடி ...ஒரு தட்டு வண்டியை ஓட்டிவரும் மனிதரை முன்பு அடிக்கடி பார்க்க முடியும் ...பெரிய ஆய்வு காலன் போன்ற கண்ணாடி குடுவைனுள்  ரோமம் போன்ற வெண்ணிற ..இனிப்பு பண்டம் ..சோன்பப்டி ..நாவில் பட்டதும் ..கரைந்து ...கலக்கும் இனிப்பு சுவை ..அதன் ஒருவித மணம் இன்றும் நினைவில் உள்ளது . எத்தனை அழுது சாதித்தாலும் அம்மா வாங்கித் தராத பஞ்சு பஞ்சான சோன்பப்டி தினசரி தாள்ல சுருட்டியது ஒரு கையிலையும், பாட்டி விரல இன்னொரு கையிலயும் பிடிச்சிக்கிட்டு,..குதியாட்டாம் போட்டுக்கிட்டு, கேள்வி மேல கேள்வி கேட்டிக்கிட்டு போவேன்.

தூரத்தில் மனியோசையே இவரது வருகையை ...குழந்தைகளுக்கு அறிவிக்கும் ..
அந்த ஆய்வு காலன் போன்ற குடுவை ..என்னை பலநாள் யோசிக்க வைத்திருக்கிறது ...இதை எங்கே இவர்கள் வாங்குகிறார்கள் ..? .நமக்கு வாங்க கிடைக்குமா என்று  ...எங்கள் ஊரில் ...இந்த பண்டத்தின்  பொது பேர் ..ஆட்டு முடி ...ஆட்டின் ரோமத்தைபோன்று இருப்பதால் ...

இன்று கடைகளில் ..சோன்பப்டி வாங்க கிடைத்தாலும் ...வண்டியில் வீடுதேடி வந்த அந்த சுவை கிடைக்கவில்லை ...நீண்டகாலம் ஆகிறது ..எங்கள் ஊரில் ...இவர்களை பார்த்து ...

எங்கே போனார்கள் ? இப்போது என்ன தொழில் செய்கிறார்கள் ? ....விடைதெரியாத வினாக்கள் ...
 

No comments:

Post a Comment