Saturday 6 October 2012

யானைப் படம், கலர்ப் படம் அதுவும் ரஜினிப் படம்...


யானைப் படம், “கலர்ப் படம்அதுவும் ரஜினிப் படம். எனக்கு சந்தோஷம் தாங்கல. கொஞ்சம் அம்மாவ நினைச்சா பயமா இருந்துச்சு ஆனா கூட இருந்த ஆறு பேரப் பார்த்தப்போ என் பயமெல்லாம் அமிர்தாஞ்சன் குணப்படித்திய தலவலி மாதிரிபோயே போச்சு,..இட்ஸ் கான்,..போயிந்தே..

ஏழு பேரும் கையப் பிடிச்சிக்கிட்டு வரிசையா அந்த மொட்ட வெயிலுல குடியரசு தின விழா பரேடு மாதிரி ஜாலியா ஆரஞ்சு மிட்டாய சப்பிட்டேப் போனோம். தெருவுல யாரும் இல்ல. இல்லைனா, அப்பவே வீட்டுக்கு நீயூஸ் போய் எனக்கு ஸ்ஷெல் பரேடு நடந்திருக்கும். ஆனா, விதி வேற மாதிரி யோசிச்சுருந்தது. எப்படின்னா - இவ படம் பார்த்துட்டு வ்ரணும், வந்து வீட்ல நாலு மாத்து வாங்கணும், பின்னாளுலுல இவங்கம்மா இவள மொத்துனத பிளாக்ல இரண்டு மொக்க போஸ்ட் போடணும்னு.

சொப்பு சாமான், காய்கறி பலசரக்கு கடை, பேங்க் விளையாட்டு விளையாடறப்போ இருக்கிற ரொம்ப பெரியவங்க ஆன மாதிரியான த்ரில்ல விட இது செம த்ரில்லா இருந்துச்சு. நாங்களே லைன்ல நின்னு டிக்கெட் வாங்கி, எங்கம்மா அப்பா கூட்டிட்டு போற பின்னாடி சீட்டு இல்லாம, சில சமயம் அதுக்கு மேல போய் பால்கனில தனியா உட்கார்ந்து தீவுலர்ந்து பார்க்கற மாதிரி எல்லாம் இல்லாம. ஃப்ர்ஸ்ட் ரோ சீட்.

ஃபர்ஸ்ட் ரோ!!! என்னோட பல நாள் கனவு. எனக்கு எப்படி இருந்திருக்கும் பாருங்க. ஹய்யோ...மனசெல்லாம்  சந்தோஷமா இருந்த்து. நானும் கனியும் ஒரே சிரிப்பும் பேச்சுமா படம் பார்த்தோம் (அதுக்கப்பறம் நல்லா அழப் போறேன்னு தெரியாமா). 




“அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே பாட்டுக்கு எங்கூட வந்த பசங்களெல்லாம் டான்ஸ் வேற. செம ஜாலியா இருந்துச்சு. இன்டெர்வல்ல அந்த நாலணவுக்கு முறுக்கோ, கடல மிட்டாயோ ஏதோ வாங்கித் தின்னோம். படம் பாத்தப்பறம் கண்ணேல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு, காதெல்லாம் கூட ஒரு மாதிரி கொய்ய்ன்னு இருந்துச்சு. அந்த தியேட்டர்ல அக்கௌஸ்டிக் (Acoustics) சரியில்ல.

No comments:

Post a Comment