பச்சை பனை ஓலையை வெட்டி ..அதன் மட்டையிலிருந்து உரித்து எடுக்கப்பட்ட நாரை ..நீரில் ஊற வைத்து ...பின்னப்பட்ட கட்டில் ...முன்பெல்லாம் பல வீடுகளில் காணமுடிந்தது ...ஆறு மாதத்திற்கு ஒரு முறை புது நார் பின்னவேண்டும் ...இவற்றின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மூட்டை பூச்சியை தேடி கொன்ற காலம் உண்டு .
ஓய்வு எடுப்பது வழக்கம்.சுத்தமான காற்று, அமைதியான சூழ்நிலை, வாகன நெரிசல் அற்ற, மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய இடம்.அப்புறம் எங்களுக்கென்று ஒரு தோட்டம் உள்ளது.அதில் தென்னை, நெல் மற்றும் கோரை உள்ளது.
தோட்டத்தில் உள்ள மோட்டாரில் ரொம்ப நேரம் குளித்து விட்டு ஒரு இளநீர் சாப்பிட்டால் அந்த சுகம் வேறு எங்கும் கிடைக்காது.கயிற்று கட்டிலில் படுத்தால் உடனே உறக்கம் வரும்..அந்த அளவுக்கு அமைதி....கொடுத்து வைத்தவர்கள் இந்த கிராமத்து மக்கள்.சிறு வயது ஞாபகங்களை கிள்ளி பார்க்கின்ற கிராமத்து நினைவுகள்.ஆற்றில் குளித்தும் , மீன் பிடித்தும் விளையாண்ட கணங்கள் இப்போதும் இனிக்கும்.
இன்று ..இவற்றை பின்ன தெரிந்தவர்களும் அதிகம் இல்லை ...பயன்படுத்த விரும்புபவர்களும் அதிகம் இல்லை .....கயிற்று கட்டிலை போலவே ..காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டது .......
No comments:
Post a Comment