Saturday 6 October 2012

சொந்தமாக ஒரு சைக்கிள் கனவு...



     கிராமங்களில் சைக்கிள் சொந்தமாக வைத்திருத்தல் என்பது ஆடம்பரமானது.ஆயிரம்பேர் வசிக்கும் ஊரில்கூட நான்கைந்து சைக்கிள்கள்தான் இருக்கும்.அதிலயும் சிலர் சைக்கிளைத் தினமும் துடைத்துப் பளபளவென வைத்திருப்பார்கள்சிலர் பேட்டரி கனெக்ஷன் மூலம் சைக்கிளின் பக்கங்களிலும் வண்ண விளக்குடன் பவனி வருவார்கள்ராலேபவர் என வெளிநாட்டுச் சைக்கிள் எனப் பெருமையுடன் கூறுவதைக் கேட்பவர்களுக்குப் பொறாமை இயல்பாக ஏற்படும்வாடகை சைக்கிள் கடைகளில் பெற்ற சைக்கிள் மூலம் எங்கும் போவதுதான் பொது வழக்கமாக இருந்ததுசின்னச் சைக்கிள் என்ற ஓட்டைச் சைக்கிளில் ஓட்டிப் பழகுவதற்குள் எல்லாச் சிறுவர்களுக்கும் முட்டி பெயர்ந்துவிடும்
        சைக்கிள் என்பது ரொம்ப நாட்களுக்கு ஆண்கள் மட்டும் ஓட்டும் வாகனமாக இருந்ததுபெண்கள் சைக்கிள் ஓட்டத் தொடங்கியபோதுஆவென்று வேடிக்கை பார்த்ததுடன், "காலம் கெட்டுப்போச்சுஎன்று பெரிசுகள் வருத்தப்படும்.
இரவில் இரண்டாமாட்டம் எனப்படும் திரைப்படம் 10.45 மணிக்குத் தொடங்கிய காலகட்டத்தில் ஒவ்வொரு திரையரங்குகளிலும் நூற்றுக்கணக்கில் சைக்கிள்கள் குவிந்துவிடும்சில தியேட்டர்களில் சைக்கிளில் வருகிறவர்களுக்கு எனத் தனிக் கவுண்டரில் டிக்கட் தருவது வழக்கம்நான் கல்லூரி மாணவனாக இருந்தபோதுகூட இரவுவேளையில் பத்தும் பத்தும் இருபது மைல்கள் சைக்கிளை மிதிச்சிட்டுப் போய்ப் படம் பார்த்திட்டு வந்திருக்கேன்எங்கே போனாலும் அஞ்சாறு சைக்கிள்கள் நகரத் தொடங்கிவிடும்ஒரு சைக்கிளை இருவர் சேர்ந்து டபுள் பெடல் போட்டவாறு கருங்கும்மென்ற இருட்டில்பெல்லை விடாமல் அடித்தவாறு ஓட்டுவது சாகசம்தான்.

நாங்க ஆறாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு மணி நேரத்திற்கு சைக்கிளை வாடகைக்கு எடுக்க, சுமார் 3 மணி நேரமாவது, மணி அண்ணன் கடையில காத்துக்கிடக்கனும்.
ஒரு மணி நேரத்துக்கு எடுத்துவிட்டு, ஒரு 5 நிமிசம் கூடிவிட்டால் விடும் டோஸுக்கு பயந்து, பக்கத்து தெருக்களிலையே சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கவேண்டும். 10 நிமிசத்துக்கு ஒரு தடவை அந்த வாடகை கடைக்கு போயி “மணியண்ணே, மணி என்ன? ன்னு கேட்டுக்கேட்டு ஒரு மணி நேரத்தை ஒரு நிமிடம் குறையில்லாமல் சுற்றி கொண்டு போயி நிப்பாட்டும் போது, என்னமோ நம்ம சொந்த வண்டிய, அடுத்தவங்கிட்ட சும்மா கொடுக்குற மாதிரியிருக்கும்.

கோடை விடுமுறையில, பொட்டப் புள்ளைங்க முன்னாடி சீன் காட்ட இந்த மாதிரி ஒரு மணி நேர மிதிவண்டிதான், நமக்கு உற்ற துணையாக இருக்கும். இரண்டு கைய விட்டு ஓட்டுரேன்னு சொல்லி, பல்ல உடச்சிக்கிட்டது, ஸ்பீடா போகிறேன் பாருன்னு, நேர போய் சாக்கடைக்குள்ள மூஞ்சி குப்புற விழுந்தது, கண்ண மூடிகிட்டு வண்டி ஓட்டுறேன் பாருன்னு, வடகம் ஊத்தி வச்சிருக்கும் பாய்களை நாசம் பண்ணுறதுன்னு, வாங்கிய வீரத்தழும்புகள் ரொம்ப, ரொம்ப அதிகம்.

சைக்கிள் செயின் கழண்டு போவது என்பது என்னமோ, அவன் பொண்டாட்டி தங்க செயின் கழண்டு காணாம போனமாதிரி ஒரு பீளிங்க் அந்த கடைக்காரன் கொடுக்குறத பார்க்கனுமே, அட அட அட....உலக நடிகர்கள் எல்லாம் ஒன்னா அவன் மூஞ்சில உக்காந்த மாதிரி, அப்படியிருக்கும். போனதடவ செயின கழட்டுனதால இந்த தடவை எனக்கு தரமாட்டான், அதுனால உன் பெயரசொல்லி வாங்கிட்டு வான்னு, பக்கத்துல இருக்குற நண்பனிடம் காசு கொடுத்து வாங்கிவரச்சொல்வது, அப்படி வாங்கிய வண்டியில, கடைக்காரன் நம்மகிட்ட நல்லா ஏமாந்துவிட்டான் என்ற தெனாவட்டுல, சிரிச்சிக்கிட்டே வண்டிய ஓட்டிக்கொண்டு போனதை எல்லாம் எப்படி நமக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடிகிறது!!!

No comments:

Post a Comment